9 லட்சம் கோடிக்கு அதிபதி; உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர்; ரோட்டுக் கடையில் உணவருந்துகின்றார்!
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபெட் உலகின் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
இந்நிலையில் வாரன் பஃபெட் ஏற்கனவே தன் சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிக்க உறுதி வழங்கியுள்ளார். தற்போது ரூ.9 லட்சம் கோடிக்கு (11,710 அகோடி அமெரிக்க டாலர்) சொந்தக்காரராக வாரன் பஃபெட் இருக்கிறார்.
பிற பணக்கரர்களை போல் வாழ்வதில்லை
அவர் தன் இளமைக் காலத்தில் சிக்கனமாகவும், எளிமையாக வாழ்க்கையை தொடங்கினாம். இந்நிலையில் அதே போன்று தற்போதும் அவர் அதே எளிமையை தொடர்கிறார்.
மற்ற உலகக் பணக்காரர்களைப் போன்று இவர் விதவிதமான உணவு சாப்பிட்ட அதிக செலவுகளை செய்வதில்லையாம்.
மாறாக அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் வேகவைத்த இறைச்சி, முட்டை, சீஸ் பிஸ்கர் மற்றும் சாண்ட்விச் என 4 டாலரில் காலை உணவை வாரன் பஃபெட் விரும்பிச் சாப்பிடுவதாக தகவல் வெளியாகிறது.