தண்ணீரில் ஊர்ந்து சென்ற வித்தியசமான உயிரினம்! குழப்பத்தில் நெடிசன்கள்
அறிவியல் பூர்வமாக முந்தைய காலத்தில் டிராகன்ங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை இன்றளவும் நாம் தேடிக்கொண்டு வருகிறோம்.
இவ்வாறான நிலையில் காண்போருக்கு குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் டிராகன் போன்ற தோற்றம் கொண்ட உயிரினத்தின் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவில், நீர் தொட்டி ஒன்றில் உடல் முழுதும் பச்சை வண்ணமாக உள்ள உயிரினம் தனது உடலை ஊதிப் பெருக்கி நெளிந்து கொண்டிருப்பது நாம் கதைகளில் கேட்டும் சைன்ஸ் பிக்ஷன், அட்வெஞ்சர் படங்களில் பார்த்தும் வந்த டிராகனைப் போல் அச்சு அசலாக உள்ளது.
மேலும், குறித்த காணொளி தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது.
a puff-faced water snake in thailand spent enough time sitting still in the swamp to grow moss and turn into a dragon, apparently pic.twitter.com/MqXzpayjPp
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) June 11, 2024
உண்மையில் அந்த உயிரினம் ஒரு தண்ணீர் பாம்பு ஆகும். ஆனால் மற்றைய பாம்புகளை விட வித்தியாசமான முறையில் தோற்றம் கொள்ளுவது இந்த டிராகன் விவாதத்தை நெட்டிஸன்கள் மத்தியில் மீண்டும் கிளப்பியுள்ளது