கனடாவில் நீதிமன்றம் விட்ட தவறினால் மீண்டும் தண்டனை விதிப்பு
வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மூன்று பேரை கத்தியால் குத்திய வழக்கனின் குற்றவாளிக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் நடந்த கத்திக் குத்தும் தாக்குதலில் ஈடுபட்ட ஜிவோனி விலால்பா அல்மென் Geovanny Villalba-Aleman எனும் நபருக்கு, ஏற்கனவே 11 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நீதிமன்றம் ஒரு கணக்கு பிழையை சரிசெய்ததன் காரணமாக குறித்த நபர் அவர் சிறையில் கழிக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு மாணவர்களும் ஒரு பேராசிரியரும் காயமடைந்தனர்.
தீவிரவாதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டபோதும், நீதிபதி அவர் கட்டிய யோசனைகள் தொலைதூரமானவை, தெளிவற்றவை எனக் கூறி அந்தக் குற்றச்சாட்டை நீக்கினார்.
தண்டனை வழங்கப்பட்ட போது எற்பட்ட கணக்கு பிழைக்காக நீதிமன்றம் மன்னிப்பு கோரியுள்ளது.