வார இறுதியில் எரிபொருளின் விலையில் வீழ்ச்சி
கனடாவில், இந்த வார இறுதியில் எரிபொருளின் விலையில் வீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் நாட்டில் பதிவாகும் மிகக் குறைந்த எரிபொருள் விலைகள் இந்த வார இறுதியில் பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெற்றோலின் விலை வீழச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலுக்கான தேசிய சராசரி சில்லறை விலைகள் வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஸ்ய போர் இடம்பெற முன்னதாக எரிபொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 160 சதமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாத ஆரம்பத்தில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 215 சதங்கள் வரையில் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாத ஆரம்பம் முதல் எரிபொருட்களின் விலைகள் ஸ்திரமான அடிப்படையில் வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.