கனடாவில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் தொடர்பில் வெளியான பகீர் தகவல்
ஒன்ராறியோவின் வசாகா கடற்கரைப்பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்களால் முன்னரும் தாக்குதல் நடத்தப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வசாகா கடற்கரைப்பகுதியில் ஜனவரி மாத தொடக்கத்தில் மர்ம நபர்களால் வீடு புகுந்து 37 வயதான Elnaz Hajtamiri என்பவர் கடத்தப்பட்டார். பொலிஸ் வேடத்தில் வந்த மூவர் கும்பல் இவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது அவர் மீது முன்னரே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் திகதி கிங் வில்லியம் கிரசண்டில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் வெ:ளியே வாகன நிறுத்துமிடத்தில் இருவர் அவரை தாக்கியதாகவும், வாகனத்தில் இருந்து இழுத்து வெளியே தள்ள முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அவரது தலையில் தாக்கிவிட்டு அவர்கள் தப்பியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் காயம்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, Hajtamiri-ன் வாகனத்தில் கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜனவரி 12ம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வசாகா கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து Hajtamiri மூவர் கும்பலால் கடத்தி செல்லப்பட்டார்.
ஆனால் அந்த நபர்கள் தொடர்பிலும் கடத்தப்பட்ட Hajtamiri தொடர்பிலும் இதுவரை எந்த தகவலும் பொலிசாருக்கு கிட்டவில்லை என்றே தெரியவந்துள்ளது.