குப்பைப் பைக்குள் துண்டாக்கப்பட்ட பெண்ணின் சடலம்: கனடாவை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்
கனடாவின் ரொறன்ரோவில் குப்பைப் பைக்குள் துண்டாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், சடலமாக மீட்கப்பட்டவர் 46 வயதான Tien Ly என குறிப்பிட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவிலேயே அவரது சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட உடற்கூராய்வில், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கண்டறிந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன், Dallas Ly, தற்போது மாயமாகியுள்ள நிலையில்,
அவரையும் விசாரணையின் ஒருபகுதியாக தேடி வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், 20 வயதான Dallas Ly முக்கிய குற்றவாளி என இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விசாரணைக்கு பின்னரே, பின்னணி தெரியவரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.