ஒன்றாரியோவில் காணாமல் போன பெண் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன பெண் ஒருவர் ஐந்து நாட்களின் பின் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளார்.
ஜெனிதா டா சில்வா என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
ஒன்றாரியோவின் வுட்ஸ்டொக் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் ஐந்து நாட்களுக்கு முன்னதாக பணி முடிந்து வீடு திரும்ப வில்லை என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் போலீசில் முறைப்பாடு செய்திருந்தனர்.
சில்வா கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து மணிக்கு, குட் ஸ்ட்ரோக் பகுதியில் அமைந்துள்ள தனது பணியிடத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
எனினும் அவர் வீட்டுக்கு வரவில்லை எனவும் அவரை எங்கு தேடியும் காணக் கிடைக்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்தப் பெண் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு எனினும் இந்த பெண் எங்கு காணாமல் போயிருந்தார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
தனது சகோதரியை கண்டுபிடிப்பதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவரது சகோதரி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
முகநூல் வழியாகவும் பல்வேறு வழிகளிலும் இந்த பெண்ணை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த தேடும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.