பாரிஸில் பொலிஸாரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி
பாரிஸில் கடந்த சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை காலை பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், கட்டுப்பாட்டை மீறி பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மகிழுந்து ஒன்றை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் காரின் சாரதியும், அவருடன் பயணித்த பெண் ஒருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பெண் பலியாகியுள்ளார்.
அப்பெண் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நிலையில் அவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முன்னதாக, மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பொலிஸார் நேற்று நண்பகல், கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.