ரொறன்ரோவில் துப்பாக்கி முனையில் பெண் ஒருவரின் வாகனம் கடத்தல்!
ரொறன்ரோவில் துப்பாக்கி முனையில் பெண் ஒருவரிடமிருந்து வாகனம் கடத்தப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் நோர்த் யோர்க்கில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடெமொன்றில் இவ்வாறு வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மூன்று கொள்ளையர்கள் குறித்த பெண்ணிடமிருந்து ஆயுத முனையில் அவரது வாகனத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கடத்தல் தொடர்பில் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் எவரிடமேனும் தகவல்கள் இருந்தால் 416-808-2222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.