கொவிட் -19 இன் வகைகளுக்கு புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார ஸ்தாபனம்
கொவிட் -19 இன் வகைகளுக்கு புதிய பெயரிடும் முறையை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இனிமேல் உலக சுகாதார ஸ்தாபனம், கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட மாறுபாடுகளைக் குறிக்கும்.
அதன்படி இங்கிலாந்து மாறுபாடு ஆல்பா (Alpha), தென்னாபிரிக்க மாறுபாடு பீட்டா (Beta) மற்றும் இந்திய மாறுபாடு டெல்டா ( Delta) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது கொவிட்-19 வைரஸ் மாறுபாடு குறித்த விவாதங்களை எளிதாக்குவதோடு, பெயர்களில் இருந்து சில களங்கங்களை அகற்ற உதவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இந்திய அரசாங்கம் கடந்த ஒக்டோபரில் நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்ற மாறுபாட்டின் பெயரை "இந்திய மாறுபாடு" என்றே அடையாளப்படுத்தியது. ஆனால் அதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அதிகாரப்பூர்வமாக பெயரிடவில்லை.
