ஏமன் ஏவுகணை தாக்குதலில் ஐவர் உயிரிழப்பு
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
நாட்டின் பல்வேறு நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அரசுப் படைகளுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நாட்டின் வடக்குப் பகுதியில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நகரமான மாரிப்பைக் கட்டுப்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், மாரிஃப் நகரில் உள்ள ராணுவ தளம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால் அந்த ஏவுகணை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. அந்த பகுதியில் 5 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.