கிரீஸ் கப்பல் மீது ஏமன் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்
செங்கடலில் கிரீஸ் கப்பல் மீது ஏமன் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
யேமனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் இருந்து தென்மேற்கே 66 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த கிரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி போராளிகள் பொறுப்பேற்றுள்ளதுடன் லைபீரிய கொடியுடன் கூடிய கப்பலை குறிவைக்க கடல்சார் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடலில் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி உலக வர்த்தகத்தில் பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.