நீங்கள் ரஷ்ய கூட்டாளி; இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
உக்ரைன் தேர்தலில் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காததற்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ன.
உக்ரைனின் போரை தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான ஐநாவில் கொண்டு வரப்பட்ட நான்கு வெவ்வேறு தீர்மானங்களை இந்தியா புறக்கணித்துள்ளது. மேற்கு உலக நாடுகள் எல்லாம் ரஷ்யாவை எதிர்க்கும் நிலையில் இந்தியா ரஷ்யாவை எதிர்க்க முடியாது என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கண்டன தீர்மானம் அமெரிக்கா மூலம் தாக்கல் செய்யப்பட்டது இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை. ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் நடுநிலையோடு இருக்கவே முடிவு செய்கிறோம்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த முயல்கிறோம் என்று இந்தியா தெரிவித்தது. உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷ்யா சரமாரி தாக்குதல்.வேகமாக பரவும் தீ.வெடிக்கும் அபாயம்! ஆதரிக்கவிலை அதன்பின் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்னொரு கூட்டம், ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டம் ஆகியவற்றில் கூட இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்கவில்லை.
அதன்பின்னர் ஐநா பொது சபை வாக்கெடுப்பில் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்காமல் விலகிக்கொண்டது. ரஷ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்த. ரஷ்யாவிற்கு ஆதரவாக 5 நாடுகள் வாக்களித்தது. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்த நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காததற்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அமெரிக்காவை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்ந்து கொண்டு இது தொடர்பாக ராஜாங்க ரீதியான உரையாடலை மேற்கொண்டதாகவும். அதில் இந்தியா மீதான அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தியதாகவும் சர்வேதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ன.
ராஜாங்க பேச்சுவார்த்தை இந்தியா - அமெரிக்கா இடையில் நடந்த டாப் ராஜாங்க பேச்சுவார்த்தை ஒன்றில் இந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சீக்ரெட் பேச்சுவார்த்தை கிடையாது ஆனாலும் மிகவும் முக்கியமான பேச்சுவார்த்தையாக இருந்தது என்று அந்த ஊடகம் குறிப்பிட்டு உள்ளது. அதில் இந்தியாவும், ஐக்கிய அரபு நாடுகளும் ரஷ்யா குறித்த நிலைப்பாட்டை அனைத்து ஐநா சபைகளிலும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளதாம்.
விவாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானத்தில் இடம்பெற்று இருந்த சில வாசகங்களை இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது அதோடு நீங்கள் தொடர்ந்து ஐநா சபையில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை பற்றி கருத்து தெரிவித்து வருகிறீர்கள். இரண்டு நாட்டிற்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம் ஒண்டிறல் இப்படி இரண்டு நாட்டு பேச்சுவார்த்தை பற்றி இந்தியா இப்போது பேசுவது என்பது நடுநிலையான நிலைப்பாடு கிடையாது. ரஷ்யா கேம்ப் அதன் அர்த்தம் நீங்கள் ரஷ்யாவிற்கு ஆதரவு என்பதுதான். இந்தியா ரஷ்யாவின் கேம்பை சேர்ந்தது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ரஷ்யாதான் இந்த போரை தொடங்கியது.
நீங்கள் அவர்களின் கேம்பில் இருக்கிறீர்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. அதே கருத்தை அமீரகத்திடமும் ரஷ்யா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
வாக்களிக்க வேண்டும் இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். க்ரீன் உடன் இருக்க வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விட்ட வாய்ப்பை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா, ரஷ்யா விட கூடாது என்று அமெரிக்க தரப்பு கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.
சர்வதேச அரங்கில் ரஷ்யாவை எதிர்க்காமல் இந்தியா தொடர்ந்து நடுநிலையாக இருந்து வரும் நிலையில் அமெரிக்காவை இந்த நிலைப்பாடு கோபப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.