எனக்கு பயமே இல்லை... விமானத்தில் பள்ளிக்குச் செல்லும் கனேடிய சிறுவன்
பலருக்கு இன்றும் விமானத்தில் பயணிப்பது என்பது கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தும் விடயம்தான்.
ஆனால், எனக்கு பயமே இல்லை என்கிறான், முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் கனேடிய சிறுவன் ஒருவன்.
கனடாவின் கியூபெக் நகரிலிருந்து கிழக்கே, 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது Isle-aux-Grues என்னும் தீவு.
ஆறு வயதுச் சிறுவனான Matéo Andermann-Tessierஇடம் உனக்கு விமானத்தில் பறப்பது பயமாக இல்லையா என்றால், இல்லை எனக்கு பழகிவிட்டது என்கிறான் அவன்.
Isle-aux-Grues என்னும் தீவில் 122 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். அங்கிருந்த பள்ளி 1999ஆம் ஆண்டு மூடப்பட்டுவிட்ட நிலையில், அங்குள்ள பிள்ளைகளுக்கு விமானத்தில் சென்று படிப்பதைத்தவிர வேறு வழி இல்லை.
Matéoவின் பெற்றோர் இருவருமே படகு ஒன்றின் கேப்டன்களாக இருக்கிறார்கள். ஆனால், குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்துவிடும், கோடைகாலத்திலும் படகுப் பயணம் அபாயகரமானது என்பதால் தங்கள் பிள்ளையை விமானத்தில் அனுப்பவே அவர்களும் விரும்புகிறார்கள்.
ஆக, Matéoவுடன் மேலும் ஐந்து மாணவர்களும் தினமும் விமானத்தில்தான் பள்ளிக்குச் செல்லவேண்டிய நிலை உள்ளது.