ஜோ பைடன் அதிரடியால் அதிர்ந்தது அமெரிக்கா!

Joe Biden America shocked by the action
By Vasanth Jan 23, 2021 10:01 AM GMT
Vasanth

Vasanth

Report

டிரம்ப் முடிவுகளை மாற்றும் விதத்தில் ஒரே நாளில் 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் அசத்தி உள்ளார்.

நேற்று முன்தினம் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் பதவி ஏற்றார். அவர் ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார். ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றில் பல உத்தரவுகள் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுகளை மாற்றி அமைத்தது ஆகும்.

ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவு, 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அமெரிக்காவின் மத்திய அரசு இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதாகும். மற்ற உத்தரவுகளில் முக்கியமானவை:- 2016-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை முந்தைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்திருந்தார்.

இப்போது மீண்டும் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை சேர்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

அந்த முடிவு நிறுத்தம். ஈரான், சிரியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் பிறப்பித்த பயண தடைகள் ரத்து. மெக்கிகோ எல்லைச்சுவர் கட்டுமானம் உடனடி நிறுத்தம் இந்த நிர்வாக உத்தரவுகளின் சிறப்பம்சம், இவற்றை செயல்படுத்த நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறத்தேவையில்லை.

அதே நேரத்தில் நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்கலாம். அப்படி நாடாளுமன்றம் நிராகரித்தால் தனது மறுப்பு ஓட்டுரிமை (வீட்டோ) அதிகாரத்தை பயன்படுத்தி, ஜோ பைடன் அதை நிராகரிக்கலாம்.

ஜோ பைடன் முதன்முதலாக அமெரிக்க ஜனாதிபதியாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:- இன்றைய நிர்வாக நடவடிக்கைகளுக்காக நான் பெருமிதம் கொள்கிறேன். நான் அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதின் மூலம் எனது செயல்பாடுகளை தொடங்கப்போகிறேன். நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. இவை நிர்வாக நடவடிக்கைகள் மட்டுமே. இவை முக்கியமானவை.

ஆனால் நாம் செய்யப்போகும் பல விஷயங்களுக்கு சட்டம் தேவைப்படும். இனி வரும் நாட்களில் நிறைய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்து போடுவேன். நாம் இன்று கொரோனாவின் கூட்டு நெருக்கடி, அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம், இனப்பாகுபாடு விவகாரம் ஆகிய பிரச்சினைகளில் செயல்பட போகிறேன் என்று அவர் கூறினார்.

முதன் முறையாக நிருபர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஜோ பைடன் 15 நிர்வாக உத்தரவுகளிலும், 2 குறிப்பாணைகளிலும் கையெழுத்து போட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் ஒரே நாளில் ஜோ பைடன் பிறப்பித்த 15 நிர்வாக உத்தரவுகள், அமெரிக்காவை அதிர வைத்துள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US