வரலாற்றில் முதன்முறையாக நிலாவில் கனடாவின் முதல் ரோவர்!
கனடா வரலாற்றில் முதன்முறையாக நிலா மேற்பரப்பில் இயங்கவுள்ள ரோவரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோவர், எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியக் கட்டமாகக் கருதப்படுகிறது.
நிலா மேற்பரப்பில் நீர் உறைவிடம் உள்ளதா என்பதைக் கண்டறிவதே ரோவரின் முக்கிய பணி எனக் கூறப்படுகின்றது. இது வெற்றிகரமாக அமைந்தால், எதிர்காலத்தில் நிலாவில் மனிதர்களின் நீண்டகால இருப்பை உறுதிசெய்யும் வழியைத் திறக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
Canadensys Aerospace Corporation (Ontario) நிறுவனத்தினால் , Canadian Space Agency (CSA) தலைமையில், Lunar Exploration Accelerator Program (LEAP) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட து.
இந்த ரோவர் சுமார் 35 கிலோ எடையைக் கொண்டதாகும். நிலா மேற்பரப்பில் நீர் பனிக்கட்டிகள் உள்ளனவா என கண்டறிவதற்கும், நிலாவின் நிலவியல் மற்றும் சுற்றுச்சூழல் தன்மைகளை ஆய்வு செய்வதற்கும் பல்வேறு விஞ்ஞான கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோவர் NASA உட்பட பல சர்வதேச விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
University of Alberta, York, Simon Fraser University போன்ற பல கல்வி நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன. மேலும், 2030களில் மனிதர்களின் நிலா வாழ்வை எளிதாக்க Lunar Utility Rover எனும் அடுத்த கட்ட ரோவரையும் கனடா உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இது நிலாவில் கட்டுமானப் பணிகள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளில் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, கனடாவின் இந்த முயற்சி, உலக விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வலுசேர்க்கையாகவும், சர்வதேச விண்வெளி கூட்டணிகளில் அதன் பங்கு மேலும் வலுப்பெறவும் வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.