கனடாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் சில மாகாணங்களில் இன்று வெப்ப அலை மற்றும் காற்று தரம் தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு வெப்ப எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, அதிக வெப்பநிலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் அல்லது வெப்ப சோர்வு போன்ற உடல் நலப் பிரச்சினைகள் உருவாகும் அபாயம் அதிகரிக்கும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வெளிப்புற செயல்பாடுகளை செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க, முடிந்தவரை குளிர்ச்சி மிக்க உட்புற இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆல்பெர்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நோவா ஸ்கோஷியா மற்றும் சஸ்காச்சுவான் மாகாணங்களில் இவ்வாறு வெப்பஅலை மற்றும் காற்றின் தரம் அபாயமாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு மற்றும் அதிக வெப்பம் காரணமாக அனைவருக்கும் உடல்நல பாதிப்பு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, மூத்த குடிமக்கள், தனியாக வாழ்பவர்கள், நீரிழிவு நோய், இதய நோய், சுவாச பிரச்சினை, மனநலப் பிரச்சினைகள் அல்லது இயங்குதிறன் குறைவுள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.