அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை; ரஷ்ய ஆர்டரை ரத்து செய்த இந்தியா!
ரஷ்யாவிடம் இருந்து ஜெட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றுக்கான ஆர்டரை இந்திய ரத்து செய்துள்ளதாக அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியிடம் அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் டொனால்டு லூ (Donald Lu) தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதன்காரணமாக, இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவது கடினமாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியிடம் வெளியுறவு மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டொனால்டு லூ (Donald Lu) இத்தகவலை தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்கா உறவு தொடர்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அவர் இதனை தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் ரஷ்ய கூட்டாளி; இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா