சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரியை எட்டி உதைத்த இந்திய் வம்சாவளி நபர்!
சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை எட்டி உதைத்த இந்திய வம்சாவளி நபருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் , 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்தியா வம்சாவளி யான 49 வயது ஹரிதாஸ் ரையான் பீட்டர். இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 52 வயது காதலியுடன் ஒன்றாக வசித்து வருகின்றார்.
இந்த நிலையில், குடியிருப்புக்கு அருகே வசித்தவரை தாக்கிய வழக்கில், தகவல் கிடைத்து பொலிஸார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது, அந்நபர் பொலிஸாரை கைது செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்ய வந்தவர்களில் ஒருவரான 22 வயதுடைய சிறப்பு கான்ஸ்டபிளின் வலது கை மற்றும் இடுப்பில் காலால் மிதித்து இருக்கிறார்.
இந்த சம்பவத்தில், பீட்டருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த நபர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட கூடும் அல்லது தண்டனையாக சவுக்கடி கொடுக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்த வழக்கானது பெப்ரவரி 8-ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.