அமெரிக்கா வெள்ளை மாளிகையில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்ம பொருள்!
அமெரிக்கா - வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருள் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த பொருளின் தன்மையை கண்டறியும் பணியில் சட்ட அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் ஜனாதிபதியின் இல்லத்துக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.
இரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் Anthony Guglielmi கருத்துப்படி, பொருள் அதன் கலவையை உறுதிப்படுத்த மேலும் சோதனைக்கு உட்பட்டுள்ளது.
எனினும், வெள்ளை மாளிகைக்குள் அது நுழைந்த விதம் தொடர்பிலும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.