கனடா முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடா முழுவதும் பல பகுதிகளுக்கு கடும் வானிலை எச்சரிக்கை வெளியிடப்பட்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் 40 சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கியுபெக் பகுதியில், காலை 8 மணியளவில் பல இடங்களில் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் அமலில் இருந்தன.

குறிப்பாக காஸ்பே தீபகற்பம் (Gaspe Peninsula) பகுதியில், வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை வரை 25 முதல் 40 சென்றி மீற்றர் வரை பனி சேரக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கியுபகெ் நகரத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கடும் குளிர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் காற்று குளிர்ச்சி (wind chill) மதிப்புகள் மறை 40 பாகை செல்சியஸ் அருகே செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தில், தென்மேற்கு பகுதிகளின் பெரும்பாலான இடங்கள் கனமான பனிப்பொழிவு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. சில பகுதிகளில் 25 சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடக்கு ஒன்டாரியோ பகுதிகளிலும் பனிப்பாழிவு எச்சரிக்கை அமலில் உள்ளது. அந்தப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முழுவதும் 30 சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தென் கிழக்கு அல்பெர்டா மாகாணத்தின் பெரும் பகுதிகளில் மூடுபனி (fog) மற்றும் உறைபனி மழை எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல், வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளில் மூடுபனி எச்சரிக்கை அமலில் உள்ளது.