பாகிஸ்தான் மசூதி தாக்குதல்: பொறுப்பேற்ற ஐ.எஸ் அமைப்பு!
பாகிஸ்தானில் ஷியா பிரிவு மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் நேற்று வெள்ளிக்கிழமை (04-03-2022) நடந்துள்ளது.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டு தளம் உள்ளது. அந்த மத வழிபாட்டு தளத்தில் நேற்றைய தினம் வழிபாடு நடைபெற்றது.
அப்போது, அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இதேவேளை, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்கச் செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் இதுவரையில் 56 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 194 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெஷாவர் மத வழிபாட்டு தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலுக்கு...
பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்வு
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தானில்இன்று இடம்பெற்ற கொடூர தாக்குதல்; 30 பேர் பலி